Offline
Menu
வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: முன்னாள் பிரதமரின் மனைவி பலி
By Administrator
Published on 09/11/2025 09:00
News

காத்மண்டு,இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய தாக்குதலுல் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சமூகவலைதள செயலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. அதேவேளை, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், மந்திரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

Comments