Offline
Menu
ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி தொடங்கியது .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்
By Administrator
Published on 09/11/2025 09:00
News

வாஷிங்டன்,உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியுள்ளது.

“Awe-dropping” என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளன. தற்போது ஆப்பிளின் ஏர்பாட் ப்ரோ 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சிறப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

இந்த முறை ஐபோன் சீரிசில் பெரிய மாற்றம் இருக்கலாம். ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments