Offline
Menu
நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
By Administrator
Published on 09/12/2025 09:00
News

சென்னை:

நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘மீண்டும் கிராமங்களை நோக்கி’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

மதுராந்தகம் அருகே சூனாம்பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் ராமதாஸ் பேசியதாவது: “நான் எந்தவொரு பதவியையும் விரும்பவில்லை. ஜி.கே.மணி சொன்னது போல, நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்கலாம்.. இப்போது துணை ஜனாதிபதி கூட தமிழர் தானே.. அனைத்து பிரதமர்களும் எனது நண்பர்கள் தான். இப்போதும் கூட பிரதமர் மோடி வந்தால் என்னைக் கட்டித்தழுவிக் கொள்வார்.

ஆனால், எனக்கு எந்த பதவியிலும் ஆசை இல்லை. எனது மக்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே நான் எம்எல்ஏ கூட ஆகவில்லை. நமது எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசச சொல்வேன். இதுபோல நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன். எனக்குப் பதவி மீது ஆசையில்லை. நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து இவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன். நீங்கள் (பெண்கள்) நினைத்தால் இந்த ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டால், உங்களுக்கு எல்லா வரமும் சட்டம் மூலமாக செய்து தருகிறோம்.”இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் முரளி சங்கர், மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments