உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காங்கோ – உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89 கொல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை, நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, பெனியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பகுதியில், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் முன்னரும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.