கோலாலம்பூர்,
மனிதவள அமைச்சகம் (KESUMA) 13ஆம் மலேசிய திட்டத்தின் (13MP) கீழ் தொழில்சந்தை மாற்றங்களை சமாளிக்க 10 புதிய ‘கேம் சேஞ்சர்’ முயற்சிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி முறைமைகள், மக்கள் தொகை மாற்றங்கள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், பசுமை பொருளாதாரம் மற்றும் கிக் பொருளாதாரத்திற்கான மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தேசிய பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இம்முயற்சிகளின் நோக்கமாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில், அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறைகள், கல்வியாளர்கள், ஈ-ஹெய்லிங் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இருந்து 1,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
KESUMA வின் தகவலின்படி, இந்த ஆலோசனைக் கூட்டம் மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட்டை உருவாக்குவதற்கான MADANI அரசாங்கத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. 13MP-இன் அடிப்படையில் தயாரிக்கப்படும் 2026ம் ஆண்டின் தேசிய பட்ஜெட், “ உச்சவரம்பை உயர்த்துதல், தரத்தை உயர்த்துதல் மற்றும் நல்லாட்சி.” என்ற மூன்று தூண்களில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.