Offline
Menu
கல்லால் தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்த Dang Wangi காவல் துறை தலைவர்
By Administrator
Published on 09/12/2025 09:00
News

கோலாலம்பூர்,

கோலாலம்பூர் Dang Wangi காவல் துறை தலைவர் ஏ.சி.பி. சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் இன்று கம்போங் சுங்கை பாருவில் நடைபெற்ற பதற்றமான அமலாக்க நடவடிக்கையின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எறிந்த கல்லால் தலையில் காயமடைந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் மின்சாரம் துண்டித்தல் மற்றும் சில வீடுகளை இடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நடந்தது.

நிகழ்விடத்தில் இருந்த காவல் துறை பணியாளர்கள் அங்கு திரண்டிருந்த குடியிருப்பாளர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தபோதிலும், சிலர் அதனை ஏற்காமல் அதிகாரிகளை எதிர்த்து பேசியதால் நிலைமை அதிகப்படியாக பதற்றமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுலிஸ்மியின் தலையில் ஏற்பட்ட காயம் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் கவலை மற்றும் கண்டனம் எழுந்துள்ளது.

Comments