கோலாலம்பூர்:
சுங்கை பாரூரில் வசிக்கும் மக்கள், சமூக வலைத்தளத்தில், குறிப்பாக வாட்ஸ்அப்’ (*WhatsApp*) வழியாக, ஒரு செய்தி குறித்து, கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தச் செய்தி, இன்றைய வெளியேற்ற நடவடிக்கைக்கு முன்னால், சுங்கை பாரு’ (Sungai Baru) குடியிருப்பாளர்கள் போல் நடித்து, ஆர்ப்பாட்டம் செய்ய, தனிநபர்களுக்கு,100 ரிங்கிட், உணவு, பானங்கள், வழங்கப்படும் என்று, தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது, “பணம் பெற்ற குண்டர்கள்”, குழப்பத்தைத் தூண்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற மேல்முறையீட்டிற்காகக் காத்திருக்கும் உள்ளூர் மக்கள், வீடுகளைக் காலி செய்வதை, வளர்ச்சி நிறுவனம் ஒத்திவைக்க மறுத்த போதிலும், தங்கள் உரிமைகளை, சட்டப்படி, பாதுகாப்போம் என்று, கூறியுள்ளனர்.
வீடுகளைக் காலி செய்யும் நடவடிக்கையின்போது, ஒரு காவல்துறை அதிகாரி, ஏ.சி.பி. சுலிஸ்மி (ACP Sulizmie), வீசப்பட்ட கல் ஒன்றால், தலையில் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம், மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அவரது தலையில் ஏற்பட்ட காயம், சமூக வலைத்தளங்களில், விரைவாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.