கோலாலம்பூர்:
பள்ளி விடுமுறை, மலேசிய தினத்தை முன்னிட்டு, பிளஸ் மலேசியா பெர்ஹாட் (PLUS Malaysia Berhad) நிறுவனத்தின் நெடுஞ்சாலைகளில், செப்டம்பர் 12, 13, 19, 20 ஆகிய தேதிகளில், போக்குவரத்து, ஒரு நாளைக்கு, 2.2 மில்லியன் வாகனங்களாக, அதிகரிக்கும் என்று, பிளஸ் நிறுவனம், எதிர்பார்க்கிறது.
வாகனமோட்டிகள், தங்கள் பயணத்தை, `மைபுளஸ்-டிடிஏ’ (MyPLUS-TTA) டிஜிட்டல் பயண அட்டவணையைப் பயன்படுத்தித் திட்டமிடுமாறு, பிளஸ் நிறுவனம், அறிவுறுத்தியுள்ளது.
இந்த வசதி, பிளஸ் செயலியில் (PLUS app) கிடைக்கிறது. மேலும், இந்தச் செயலி, பண்டிகை காலங்கள் அல்லாத, உச்ச நேரங்களுக்காக, மேம்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்தைத் திட்டமிடுவதற்கு, இந்தச் செயலியை, மேம்படுத்துமாறும், பயணத்திற்கு முன்னால், தங்கள் டச் `என்’ கோ (Touch ‘n Go) அட்டை அல்லது மின்-பணப்பையில் (eWallet), போதுமான இருப்பு இருப்பதை, உறுதி செய்யுமாறும், பிளஸ் நிறுவனம், வாகனமோட்டிகளை, கேட்டுக்கொண்டுள்ளது.