சென்னை,நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு படத்தில் நடித்து மூன்று வருடங்கள் ஆகின்றன. கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்தன.
இருந்தாலும் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் குறையவில்லை. பீஸ்ட், ரெட்ரோ, கூலி என அடுத்தது தமிழில் நடித்தார். இந்தநிலையில், பூஜா ஹெக்டேவுக்கு 3 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு பான் இந்திய படத்தில் அவர் நடிக்கிறார்.
பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் பங்கேற்பதைக் காட்டும் ஒரு மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.