Offline
Menu
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மனைவி மற்றும் மகனின் முன்னிலையில், தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
By Administrator
Published on 09/13/2025 09:00
News

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், 50 வயது இந்திய வம்சாவளி ஆண் ஒருவரான சந்திரா நாகம்மல்லையா, தனது மனைவி மற்றும் மகனின் முன்னிலையில், ஒரு ஹோட்டலில் கூரிய ஆயுதத்தால் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் செப்டம்பர் 10, 2025 அன்று நடந்தது. எனினும் நேற்று இந்த செய்தி இணைய தளங்களில் வைரலானது.

போலீசார், சந்திராவின் சக ஊழியரான 37 வயது யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்து கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த நடந்த இடத்தில் குற்றவாளி ரத்தத்தில் மூழ்கியிருந்ததுடன் மற்றும் ஒரு கூரிய ஆயுதமும் வைத்திருந்தார். போலீசாரின் அறிக்கைகளின்படி, இந்த கொலை ஒரு பழைய வாஷிங் மெஷின் பற்றிய விவாதம் காரணமாக ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.

சந்திரா, கோபோஸ் மார்டினஸை அந்த மெஷினை பயன்படுத்தாதது பற்றி அறிவுறுத்தியபோது, கோபோஸ்-மார்டினஸ் கோபமடைந்தார். சந்திராவின் மனைவி மற்றும் மகன் அவரை காப்பாற்ற முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.

Comments