இந்தியாவில் ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்' எனக் கடந்த செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெட் தேர்வை எதிர்கொள்வதில் என்ன சிக்கல்? ஆசிரியர்கள் அச்சப்படுவது ஏன்?
இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.