2020 மற்றும் 2025 க்கு இடையில் எந்த நிர்வாகமும் தார்மீக உயர் நிலையைக் கோர முடியாது. ஏனெனில் மூன்று நிர்வாகங்களில் “மேலும் நடவடிக்கை எடுக்கப்படாமல்” மூடப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பான 41 வழக்குகள் இருக்கிறது என்று பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறுகிறார்.
சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸாலினா ஓத்மான் சையத் வெளிப்படுத்திய தரவுகள் குறித்து கருத்து தெரிவித்த ரஃபிஸி, முஹிடின் யாசின் தலைமையிலான பெரிகாத்தான் தேசிய நிர்வாகம், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமையிலான பாரிசான் தேசிய அரசாங்கம் மற்றும் அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் ஆகியவற்றில் வழக்குகள் பரவியுள்ளன என்றார்.
எனவே, இந்த வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் அரசியல்வாதிகளும் யார் மோசமானவர்கள் என்று விரல் நீட்ட முடியாது. ஏனெனில் குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கான 68% NFA ‘விருது’ மூன்று பிரதமர்களையும் PN, BN மற்றும் PN ஆகியோரையும் உள்ளடக்கியது என்று அவர் இன்று X இல் ஒரு பதிவில் கூறினார்.