கோத்தா திங்கி,
கணவன், மனைவி மற்றும் பெண் ஒருவர் என மூவர் இன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக கோத்தா திங்கி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
முகம்மட் பய்ரூல் ஜாஃபார் (வயது 43), அவரது மனைவி எலிகா சபித்ரி (வயது 33) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நூர்சகீலா யூசுப் (வயது 39) நீதிபதி ஹைடர் பாரிட்சால் அபு ஹசன் முன்னிலையில் குற்றச்சாட்டுகளை வாசிக்கப்பட்டபோது, புரிவதாக தலையசைத்தனர். இருப்பினும், வழக்கு மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதால் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, மூவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தாமான் ஸ்ரீ பெனாவார் பகுதியில் 80.33 கிலோகிராம் மெத்தம்பேட்டமினை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 1952 போதைப்பொருள் தடுப்பு சட்டம், பிரிவு 39B(1)(a) மற்றும் குற்றச்சட்டம் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்.