பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார்.
தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடையில் அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் போல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து 11 நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.