Offline
Menu
பேராக், சிம்பாங் புலாய் ஆற்றில், துணியால் சுற்றப்பட்ட சடலம் கண்டெடுப்பு
By Administrator
Published on 09/14/2025 09:00
News

பேராக்,

கம்போங் கெரவாட் Orang Asli கல்லறைகளுக்கு அருகில் உள்ள சிம்பாங் புலாய் ஆற்றின் கரையில், துணியால் சுற்றப்பட்ட ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியுற்றதை அடுத்து 28 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ACP அபாங் ஜைனல் அப்தீன் அபாங் அஹமட் தெரிவித்தார்.

பேராக் காவல்துறையின் தடயவியல் பிரிவின் (Forensic Unit) ஆரம்ப விசாரணையில், உடல் ஒரு மரத்தின் அருகில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், சிம்பாங் புலாய் காவல் நிலையதில் 019-5448601 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Comments