கெடா
கெடா மாநிலத்தில் குவார்செம்படக் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு பெண் மற்றும் அவரது மணமகன் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒரு சந்தேகநபரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர். இந்த விசாரணை கொலைச் சட்டம் பிரிவு 302 (Section 302 of the Penal Code) கீழ் நடத்தப்படுகிறது என்று யான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிசி அப்துல்லாதெரிவித்தார்.
29 வயதுடைய சந்தேக நபர் நேற்று காலை 9.45 மணியளவில் கோலத் திரெங்கானுவில் வைத்து கைது செய்யப்பட்டார். பரபரப்பாக வைரலான இந்த சம்பவம் ஒரு பெண்மணி 28 வயதுடையவர் காரிலும் , அவரது மணமகன் 30 வயதுடையவர் வீட்டின் முன்னுள்ள சாலையிலும் கத்திக்குத்து காயத்துடன் இறந்த நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை பெண்ணின் உறவினர் ஒருவர் தாக்கியதாக காவல்துறை கூறுகிறது. சந்தேக நபர் (கைதானவர்) ஒரு மொபைல் போன் வணிகர் ஆவார்.
இது குறித்த விசாரணையை காவல்துறை தீவிரமாக நடத்தி வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.