கோத்த கினபாலு: ஆயுதப்படையைச் சேர்ந்த பிரீபெட் முகமது இர்பான் ஹைகல் அப்துல்லா (20) இறந்து கிடந்தார். மற்றொருவர் பிரீபெட் முகமது சுல்கர்னைன் ஜாஃபர் (27) காணாமல் போனார். செம்போர்னாவின் புலாவ் மடாக்கிங்கில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஐந்தாவது படைப்பிரிவின் கூற்றுப்படி, பிரீபெட் முகமது இர்பான் மயக்கமடைந்து காணப்பட்டார். மேலும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) மருத்துவ அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரீபெட் முகமது சுல்கர்னைன் காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஓப்ஸ் பாசிரை நடத்தும் போது இரு பணியாளர்களும் சிக்கலில் சிக்கி நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.