அலோர்ஸ்டார்,
பள்ளி விடுமுறை மற்றும் மலேசியா தின நீண்ட வார இறுதி காரணமாக, புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு , சுங்கச்சாவடியில் (ICQS) வாகன நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது.
நேற்று 21,971 பேர் ICQS வழியாகச் சென்றுள்ளனர். இதில் 4,941 பேர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரான நிலையில், 17,030 பேர் தாய்லாந்து நோக்கிப் பயணித்துள்ளனர் என எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (AKPS) கமாண்டர் SAC மொஹமட் நசாருடின் தெரிவித்டுதுள்ளார்.
நெரிசலை சமாளிக்க, விரைவு நடவடிக்கை குழு (Quick Response Team) மற்றும் கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து போக்குவரத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பயணிகள் தங்களின் பயணத்தை முன்னதாகத் திட்டமிடுவதோடு, அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் AKPS அறிவுறுத்தியுள்ளது.