கோலாலம்பூர்:
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் (Doha), இஸ்ரேல் நடத்திய, சமீபத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு ஐக்கிய முஸ்லிம் இராணுவ முன்னணிக்கு, ஈரான், அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஈரானின் எக்ஸ்பெடியென்சி கவுன்சில்’ (*Expediency Council) உறுப்பினர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei*), ஒ.ஐ.சி.’ (OIC) மாநாட்டில், இஸ்ரேலுக்கு எதிராக, ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால், சவுதி அரேபியா, துருக்கி, ஈராக் போன்ற நாடுகளும், எதிர்காலத்தில், இஸ்ரேலியத் தாக்குதல்களை, எதிர்கொள்ளக்கூடும் என்று, எச்சரித்தார். இதற்கு “ஒரே தீர்வு, ஒரு இராணுவக் கூட்டணியை, உருவாக்குவதுதான்,” என்று, ஈரானிய ஊடகங்கள், அவரது கருத்துகளை, வெளியிட்டுள்ளன.
இதனிடையே,
கோம்’ (*Qom*) நகரில் உள்ள, மதப்பள்ளி மாணவர் பிரதிநிதிகளின் சபை’யின் (Assembly of Seminary Students’ Representatives) தலைவரான, ஒரு ஷியா மதகுருவும் (Shia cleric), ஒரு கூட்டு இஸ்லாமிய இராணுவத்தை, உருவாக்க வேண்டும் என்று, அழைப்பு விடுத்துள்ளார்.