Offline
Menu
நாட்டின் பல மாநிலங்களில் கனமழை, பலத்த காற்று வீசும் – மெட்மலேசியா எச்சரிக்கை
By Administrator
Published on 09/16/2025 09:00
News

கோலாலம்பூர்:

நாட்டின் பல மாநிலங்களில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு துறை (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தத் துறையின் அறிக்கையின்படி, பாதிப்பு ஏற்படும் மாநிலங்கள் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (கெரியான், லாரூட், மாடாங் & செலாமா, உலு பேராக், ககோலா கங்சார், மஞ்சங்) மற்றும் ஜோகூர் (குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு) என்பனஆகும்.

அதேநேரம் சபா மாநிலத்தில் குவாலா பென்யு, பியூஃபோர்ட், கெனிங்காவ், தம்புனன், பாப்பார், புட்டாடன், பெனாம்பாங், கோத்தா கினாபாலு, துவாரன், கோத்தா பெலுட் மற்றும் லாபுவானிலும் இந்த எச்சரிக்கை அமலில் உள்ளது.

மேலும், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், பகாங், திரெங்கானு, சரவாக், சபா மேற்கு பகுதி மற்றும் லாபுவான் கடலோரப் பகுதிகளுக்கு இன்று மதியம் 1 மணி வரை முதல் நிலை (Category 1) பலத்த காற்று மற்றும் கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 3.5 மீட்டர் உயர அலைகள் எழவும் வழிவகுக்கும். இதனால் சிறிய படகுகள், கடல் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் நீர்விளையாட்டுகளுக்கு ஆபத்து ஏற்படும்,” என்று மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

Comments