கோலாலம்பூர் –
நேற்று இரவு ஜாலான் ஹாங் துவாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, ஆறு வாகனங்கள் தொடர்பான விபத்துக்குக் காரணமானது என்று, நகர போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையின் தலைமை உதவி ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.
இரவு சுமார் 11.30 மணியளவில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிசான் சில்ஃபி மீது மோதியதில் தொடர் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, மேலும் ஒரு பேருந்து, ஒரு MPV மற்றும் இரண்டு கார்கள் சம்பவத்தில் சிக்கின என்று அவர் சொன்னார்.
அங்கு டொயோட்டா வியோஸ், நிசான் அல்மேரா, ஹூண்டாய் ஸ்டாரியா, ஹோண்டா சிட்டி ஆகிய நான்கு வாகனங்கள் இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, ஆரம்ப சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.