கோலாலம்பூர்:
பினாங்கு, ஆயிர் இத்தாம், பாயா தெருபோங் பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின், 21-வது மாடியிலிருந்து, விழுந்த, 14 வயதுப் இளம் பெண், ஒருவர், பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், நேற்று இரவு, சுமார் 8.06 மணியளவில் நடந்துள்ளது.
கட்டிடத்தின், கீழ்த் தளத்தில், சுயநினைவின்றி கிடந்த, அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே, உயிரிழந்ததாக, உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின், ஆரம்பக்கட்ட விசாரணையில், எந்தக் குற்றவியல் கூறுகளும், கண்டறியப்படவில்லை.
இதனால், இந்த வழக்கு, திடீர் மரணம் (SDR) என, வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று, வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி அப்துல் ரோசாக் முகமட் கூறினார்.
சரியான மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய, அப்பெண்ணின் உடல் பினாங்கு மருத்துவமனைக்கு (Penang Hospital), பிரேதப் பரிசோதனைக்காக, அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அனுமானங்களைத் தவிர்த்து, விசாரணைக்கு, இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று, காவல்துறை, பொதுமக்களுக்கு, அறிவுறுத்தியுள்ளது.