கோலாலம்பூர்:
இன்று அதிகாலை, கோலா குபு பாருவில, Ali River Campsite முகாமில், ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில், சுமார் 400 பேர், சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு இலக்காவிற்கு, காலை, 5.40 மணியளவில், ஒரு அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, கோலா குபு பாரு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும், சம்பவ இடத்திற்கு, விரைந்தனர்.
மேலும் மழை குறைந்து, ஆற்றின் நீர்மட்டம், குறைந்ததைத் தொடர்ந்து, நிலைமை, கட்டுப்பாட்டில் இருப்பதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்பு இலாக்கா வின் நடவடிக்கை துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) உறுதிப்படுத்தினார்.
வெள்ளம் வடிந்ததும், பாதிக்கப்பட்டவர்கள், தீயணைப்பு வீரர்களின் மேற்பார்வையின் கீழ், பாதுகாப்பான இடங்களுக்கு, மாற்றப்பட்டனர்.