கோலாலம்பூர்:
கிள்ளான், காப்பார் (Kapar, Klang) பகுதியில், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த, 33 வயது வியாபாரியின், கொலை தொடர்பாக, 72 வயது முதியவர் ஒருவரையும் இரண்டு இந்தோனேசிய நாட்டவர்கள் உட்பட, நான்கு ஆண்களையும் காவல்துறையால், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எஸ்.விஜயராவ், 19 முதல் 72 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், மாவட்டத்தில், நடத்தப்பட்டச் சிறப்பு நடவடிக்கைகளில், கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை, அதிகாலை, 3.30 மணியளவில், கம்போங் பெரேபாட், ஜாலான் கெம்பாஸ் கிரி, என்ற இடத்தில், பாதிக்கப்பட்டவர், காயங்களுடன், உயிரிழந்து கிடந்தார். இதனிடையே,அவருக்கு, எந்தவிதக் குற்றப் பதிவுகளும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையில், அவர், இறந்து, 24 மணி நேரத்திற்குள், கழுத்து நெரிக்கப்பட்டு, உயிரிழந்தது, உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இதுவரை, ஏழு பேரிடம், வாக்குமூலங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கொலைக்கானக் காரணத்தை, கண்டறிய, குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், விசாரணைகள், நடைபெற்று வருகின்றன.