சிரம்பான்:
நேற்றிரவு பெய்த தொடர் கனமழை காரணமாக போர்ட் டிக்சனின் லுக்குட், கம்போங் ஜிமா லாமாவை கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 33 பேர் (18 பெரியவர்கள், 15 குழந்தைகள்) அங்கிருந்து வெளியேறினர்.
பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை 10.40 மணிக்கு திறக்கப்பட்ட கம்பங் ஜிமா லாமா சமூக மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என போர்ட்டிக்சன் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி கேப்டன் (PA) முகமட் ரிட்சுவான் முகமட் புனிரான் கூறியுள்ளார்.
நள்ளிரவு முதல் சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது வானிலை தெளிவாக உள்ளதால் சில மணி நேரங்களில் நீர் முழுவதுமாக வடியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கிராமம் நதிக்கரையிலும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் “flood hotspot ” என கருதப்படுகிறது.
இதுவரை வீடுகள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை. அதேசமயம், அதிகாரிகள் நிலைமையை நெருங்கி கண்காணித்து வருகின்றனர் என்றும், நிவாரண மையத்தையும் கவனித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.