கோலாலம்பூர்:
கோலாலம்பூரில், பாதசாரிகள் கடக்கும் இடத்தில் (zebra crossing), மின்சாரச் ஸ்கூட்டர்’ (*e-scooter*) ஓட்டிச் சென்ற, ஒருவர், மோட்டார் சைக்கிளால், மோதப்பட்டு, கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் குறித்த, காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில், வைரலாகியுள்ளது.
Aiman Lacoste, என்ற பயனர், இந்த காணொளியைத், டிக்டாக்கில் (TikTok) பகிர்ந்துள்ளார்.
இந்தக் காணொளி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட, பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்த ஆடவர், எதிர் திசையிலிருந்து வந்த, பல மோட்டார் சைக்கிள்களில், ஒன்றால், மோதப்பட்டார்.
மோதிய வேகத்தில், அவர், கீழே விழுந்ததுடன், அவரது `ஸ்கூட்டர்’ம், தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில், அவருக்கு, காயம் ஏற்பட்டதா என்பது, இன்னும், தெளிவாகத் தெரியவில்லை.
இந்தக் காணொளி, சமூக வலைத்தளங்களில், தற்போது விவாதத்தை, ஏற்படுத்தியுள்ளது. சிலர், ஸ்கூட்டர் ஓட்டியவரை, குற்றம் சாட்டினர். மற்றவர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டியவர், மெதுவாகச் சென்றிருக்கலாம் என்று, சுட்டிக்காட்டினர். இருப்பினும் ஜனவரி 1, 2021 முதல், பொதுச் சாலைகளில், மின்சாரச் `ஸ்கூட்டர்’ ஓட்டுவது, தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு, 1987-ஆம் ஆண்டு, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், RM1,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது, மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை, விதிக்கப்படும்.