கோலாலம்பூர்:
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் (Doha), இஸ்ரேல் நடத்திய, சமீபத்திய வான்வழித் தாக்குதலில் (airstrike), ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உட்பட, ஆறு பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim), இன்று, நடைபெறும், அரபு-இஸ்லாமிய சிறப்பு உச்சி மாநாட்டில், மலேசியாவின், தேசிய அறிக்கையை, வழங்க உள்ளார்.
மேலும், காசாவில் (Gaza) மோசமடைந்து வரும், மனிதாபிமான நெருக்கடி குறித்தும், அவர், எடுத்துரைப்பார்.
கத்தார் நேரப்படி, மாலை 6 மணியளவில் அதாவது மலேசிய நேரப்படி, இரவு 11 மணிக்கு அன்வார், இந்த அறிக்கையை, வழங்குவார்.
அதுமட்டுமின்றி இந்த உரையின் போது கத்தாருக்கு, மலேசியாவின், ஒற்றுமை, பாலஸ்தீன உரிமைகளுக்கு, மலேசியாவின், உறுதியான ஆதரவு ஆகியவற்றை, அவர், மீண்டும், உறுதிப்படுத்துவார்.
கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல்-தானியின் அழைப்பின் பேரில், நேற்று இரவு, தோகா சென்றடைந்த அன்வாருக்கு, சிறப்பான, வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டில், ஈரானிய அதிபர் மசூட் பெசெஷ்கியன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈராக் பிரதமர் முகமட் ஷியா அல்-சுடானி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ், உட்பட, பல்வேறு உலகத் தலைவர்கள், கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில், கூட்டு இஸ்லாமிய நடவடிக்கை குறித்த, ஒரு இறுதி அறிக்கை (Final Communiqué), ஏற்றுக்கொள்ளப்படும். வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், மூத்த அதிகாரிகளுடன், அன்வார், பல இஸ்லாமியத் தலைவர்களுடன், இருதரப்பு சந்திப்புகளையும் (bilateral meetings), நடத்த உள்ளார்.