கோத்தா பாரு:
குவா முஸாங் மற்றும் கோத்தா பாருவை இணைக்கும் FT008பாதை, நேற்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது. இந்த முடிவு, பாதையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் பிளவின் காரணமாக எடுக்கப்பட்டடாக கூறப்பட்டுள்ளது..
கி.மீ. 348.10 முதல் 350.20 வரை உள்ள பாதையில் கடுமையான பிளவுகள் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அபாயம் உள்ளது. இதனால் பாதையை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என மச்சாங் பொது பணியாளர் துறை தெரிவித்துள்ளது.
சீரமைப்பு பணிகள் முடியும்வரை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அனைத்து பாதுகாப்பு மற்றும் வீதி சின்னங்களை கவனமாக பின்பற்குமாரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு, பொதுமக்கள் மச்சாங் மாவட்ட JKR அலுவலகத்தை 09-975 2040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.