புத்ராஜாயா,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கடந்த செவ்வாய்க்கிழமை, ‘Op Rentas’ என்ற நடவடிக்க வழி பல மாநிலங்களில் ஒரேநாளில் மூன்று குடிநுழைவு துறை அதிகாரிகளை கைது செய்தது. அவர்கள், வெளிநாட்டு பணியாளர்களை சட்டவிரோதமாக “counter setting” சிண்டிகேட் வழியாக நுழைவிக்க லஞ்சப் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
MACC யின் அதிகாரப்பூர்வ TikTok கணக்கில் வெளியிடப்பட்ட பதிவின்படி, மூத்த அதிகாரி ஒருவரின் சொத்துகளில் சுமார் RM1.5 மில்லியன் இருப்பதாக தெரியவந்தது. இதில் RM1 மில்லியனுக்கு மேல் Tabung Haji கணக்கில் அவரது, அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் உள்ளதாகவும், RM400,000 க்கும் மேல் Amanah Saham Bumiputera (ASB) கணக்கில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சந்தேகநபரிடமிருந்து RM60,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் RM13,900 பணம் மீட்டெடுக்கப்பட்டது.
மற்றொரு நடவடிக்கையில், ஒரு பெண்கள் அதிகாரியிடமிருந்து RM125,000 பணத்தை வீட்டின் கூரையில் மறைத்து வைத்திருந்ததாகவும், RM15,000 மதிப்புள்ள நகைகள் மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்னொரு பெண் அதிகாரி RM80,000 மதிப்புள்ள நகைகள், RM41,470 பணம் மற்றும் 13,300 தாய் பாத் பணம் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மூன்று சந்தேகநபர்களும் counter-setting சிண்டிகேட்டுடன் ஒத்துழைத்து, அதிகாரப்பூர்வ குடிநுழைவு நடைமுறைகளை பின்பற்றாமலே ஊழல் பணம் பெற்றதாக MACC துணை தலைமை ஆணையர் (Operations) டத்தோ ஸ்ரீ அகமட் குஸைரி யஹயா கூறினார்.