கோலாலம்பூர்:
ரவுப், உலு காலி (Ulu Gali, Raub) பகுதியில், ஒரு பழையக் கல் குவாரியில், கடந்த வெள்ளிக்கிழமை, பாறைச் சரிவில், புதைந்து காணாமல் போன, 30 வயது முகமட் ஃபஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் தேடும் பணி, ஐந்து சதுர மீட்டருக்கும் மேலாக, இன்று, விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காலை, 7 மணிக்குத் தேடுதல் நடவடிக்கைகள், தொடங்கியது என்று, ரவுப் தீயணைப்பு, மீட்புத் இலக்காவின் தலைவர், ஜலாஇலுடின் அப்துல் முபின் கூறினார்.
நிலச்சரிவு காரணமாக, மண், உறுதியற்றதாகவும், பாறைகள், சரிந்து விழுந்துதால், மீட்புப் பணியாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன், பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை, 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான, இடிபாடுகள், அகற்றப்பட்டுள்ளன.
அந்தத் தொழிலாளி, தனது இயந்திரத்திலிருந்து, குதித்து, தப்பிக்க முயன்றபோது, பாறைகளின் அடியில், சிக்கிக்கொண்டார். இந்தச் சம்பவத்தில், மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள், காயமடைந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் இலாகா பணியாளர்கள், காவல்துறையினர் மேலும் பொது பாதுகாப்புப் படை (APM) பணியாளர்கள், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜெ.பி.பி.எம்.’ (*JBPM*) பயிற்சி பெற்ற, மோப்ப நாய் டென்டி’ (Denti), இந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு, உதவி வருகிறது.