Offline
Menu
மிரி கடற்கரையில் பச்சை குத்தப்பட்ட அடையாளங்களுடன் சடலம் – அடையாளம் காண போலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை
By Administrator
Published on 09/16/2025 09:00
News

கூச்சிங், 

நேற்று கம்போங் பகாம் அருகே கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிரி போலிசார், பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

சுமார் 30 முதல் 40 வயதுக்குள் இருக்கக்கூடிய அந்த ஆண், எந்தவித அடையாள ஆவணங்களும் வைத்திருக்கவில்லை என மிரி மாவட்ட பொலிஸ் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் பார்ஹான் லீ அப்துல்லா கூறியுள்ளார்.

“முதல்கட்ட விசாரணையில், சடலத்தின் இடது கை, வலது கை மற்றும் முதுகில் பச்சைகுத்தியிருப்பது தெரியவந்தது. மருத்துவ உதவியாளர் ஒருவர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சடலம் தற்போது மிரி மருத்துவமனை நீதிமருத்துவத் துறைக்கு அனுப்பப்பட்டு உடற்கூறு பரிசோதனை நடைபெறுகிறது. இந்த வழக்கு திடீர் மரணம் (sudden death) என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் யாரேனும் காணாமல் போயிருந்தால், தாஞ்சூங் லோபாங் பொலிஸ் நிலையத் தலைவர் சர்ஜெண்ட் மலினா கிலட் (011-12017034), தாஞ்சூங் லோபாங் பொலிஸ் நிலையம் (085-437290) அல்லது அருகிலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் தொடர்பு கொண்டு அடையாளம் காண உதவுமாறு போ லிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments