கோலாலம்பூர்:
உக்ரைன் போரை (Ukraine war) முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ (NATO) நாடுகள், சீனப் பொருட்களுக்கு, 50-100% வரி விதிக்க வேண்டும் என்றும், ரஷ்ய எண்ணெயை, வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வலியுறுத்தியுள்ளதால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, “விளைவுகள் ஏற்படும்” என்று, எச்சரித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), டோனல்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தார்.
மேலும், சீன வணிக அமைச்சு பேச்சுவார்த்தை மூலம், பிரச்சினைகளைத் தீர்க்குமாறு, வாஷிங்டனை, வலியுறுத்தியுள்ளது. டிரம்ப், `இந்த வரி விதிப்புகள், மாஸ்கோவை (Moscow) சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு, அழுத்தம் கொடுக்க, பெய்ஜிங்கிற்கு, உதவும். போர் முடிந்ததும், இந்த நடவடிக்கைகள், நீக்கப்படும்,” என்று, உறுதியளித்தார்.
இதனிடையே, சீனா, நடுநிலையாக இருந்தாலும், ரஷ்யாவுடன், நெருக்கமாக, உள்ளது. அதேசமயம், மாஸ்கோவிற்கு, ஆதரவாக, கியூவ்-இனால் (Kyiv), நிராகரிக்கப்பட்ட, சமாதானத் திட்டங்களையும், அது, முன்வைத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, ஸ்பெயினில், அமெரிக்க-சீன வர்த்தகப் பிரதிநிதிகள், ஒரு தற்காலிகப் பேச்சுவார்த்தையில், சந்தித்தபோது, வெளியிடப்பட்டது.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரு தரப்பினரும், 100%-க்கும் அதிகமான, வரிகளை, விதித்ததால், அவர்கள், இடையே, ஒரு போர், வெடித்தது.