கோலாலம்பூர்:
ஆஸ்திரேலியா, காலநிலை மாற்றத்தால் மோசமான, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகளை, எதிர்கொள்ளும்.
இதனால், எந்தவொரு சமூகமும், பாதுகாப்பாக இருக்காது என்று, காலநிலை மாற்ற அமைச்சர், கிறிஸ் போவன் வெளியிட்ட, புதிய தேசியக் காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை, எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியக் காலநிலைச் சேவை நிறுவனத்தால், நடத்தப்பட்ட இந்த அறிக்கை, வெள்ளம், சூறாவளி, வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத்தீ ஆகியவை, மோசமடைந்து வருவதாக, எச்சரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் , 3°C-க்கு மேல், அதிகரித்தால், சிட்னி, டார்வின் நகரங்களில், வெப்பம் தொடர்பான, இறப்புகள், 400%-க்கும் மேல், உயரும் என்று, அது, மதிப்பிட்டுள்ளது.
மேலும், கடல் மட்டம், உயர்வதால், 2050-க்குள், 1.5 மில்லியன் கடற்கரைவாசிகள், அபாயத்தில், உள்ளனர். 2090-க்குள், 3 மில்லியனுக்கும் அதிகமானோர், பாதிக்கப்படுவர்.
அதுமட்டுமின்றி, கடுமையான வானிலையால், ஏற்படும், பொருளாதார இழப்புகள், ஆண்டுக்கு, $40 பில்லியனை, எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.