Offline
Menu
கூகுள் ஜெமினியின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு: தனியுரிமைக் கவலைகளை எழுப்பியுள்ளது!
By Administrator
Published on 09/17/2025 09:00
News

கோலாலம்பூர்:

கூகுள் ஜெமினியின் (Google Gemini) பிரபலமான, “Banana AI சேலை டிரெண்ட் குறித்து, சமூக வலைத்தளங்களில், அச்சம், பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரலான, ஒரு காணொளியில், ஒரு பெண், தான் பதிவேற்றிய, படத்தில், தெரியாத, உடலில் இருந்த, ஒரு மச்சம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI-generated), உருவாக்கப்பட்ட, படத்தில், வெளிப்பட்டதாக, கூறியுள்ளார். இந்தச் சம்பவம், “பயமுறுத்துவதாகவும், அச்சம் தருவதாகவும்” இருந்ததாக, அவர், விவரித்துள்ளார்.

எனவேதான், தனிப்பட்டப் புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவுத் தளங்களில், பதிவேற்றுவதில், கவனமாக இருக்குமாறு, அவர், மற்றவர்களை, எச்சரித்துள்ளார். ஜெமினி பயன்பாட்டில் உள்ள, கூகுளின் `நானோ பனானா’ மாதிரி, பயனர்களின் புகைப்படங்களை, பழங்காலச் சேலை உருவப்படங்களாக மாற்றுவதில், பெரும், கவனத்தை, ஈர்த்துள்ளது.

இதனிடையே இந்த செயற்கை நுண்ணறிவு தளத்தின் பயன்பாடு குறித்த இந்தக் காணொளி, கிட்டத்தட்ட, 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும், பலரும், தாங்கள், இதுபோன்ற அனுபவங்களை, எதிர்கொண்டதாக, பகிர்ந்துள்ளனர். சிலர், தங்கள் உடலில், தெரியாத, பச்சை குத்தல்களை, செயற்கை நுண்ணறிவு, காட்டியதாக, கூறினர்.

சில பயனர்கள், ஜெமினி, அவர்களின் விரிவான, `டிஜிட்டல் அடிச்சுவட்டை’ (digital footprint) அணுகியிருக்கலாம் என்று, ஊகித்த போதிலும், நிபுணர்கள், யதார்த்தமான திருத்தங்களை, உருவாக்க, இந்தத் தொழில்நுட்பம், இணையத் தரவுகளிலிருந்து (online data), தகவல்களை, எடுப்பதாக, குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு, தனியுரிமை, பயனர் பாதுகாப்பு குறித்த, ஒரு புதிய விவாதத்தை, ஏற்படுத்தியுள்ளது.

Comments