Offline
Menu
பஞ்சாப்: வரலாறு காணாத வெள்ளம்; விவசாயிகள் எதிர்காலம் குறித்த அச்சத்தில்!
By Administrator
Published on 09/17/2025 09:00
News

கோலாலம்பூர்:

இந்தியாவின், விவசாய மையமான, பஞ்சாப் (Punjab) மாநிலத்தில், பெய்து வரும், பருவமழையால், வரலாறு காணாத, வெள்ளம், ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும், விவசாய நிலங்கள், சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது, 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், 400,000-க்கும் மேற்பட்ட மக்கள், பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில், சராசரியை விட, கிட்டத்தட்ட, மூன்றில் இரண்டு பங்கு, அதிகமாகப், பெய்த மழையால், தூர், லாசியா (Toor and Lassia) போன்ற கிராமங்கள், 10 அடி உயரத்திற்கு, வெள்ள நீரில், மூழ்கின. இதனால், வீடுகள், பயிர்கள், கால்நடைகள், அடித்துச் செல்லப்பட்டன.

விவசாயிகள், தங்கள் நிலங்கள், கோதுமை பயிரிடுவதற்கு, சரியான நேரத்தில், மீட்கப்படுமா என்ற, அச்சத்தில், உள்ளனர். மேலும் நிலமற்றத் தொழிலாளர்கள், வீடுகளையும், வேலைகளையும், இழந்துள்ளனர்.

இந்திய, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), $180 மில்லியன் நிவாரணத் தொகுப்பை, அறிவித்துள்ளார்.

இருப்பினும், பஞ்சாப், மத்திய அரசின், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், சேர, மறுத்துவிட்டதால், மீட்புப் பணிகள், மெதுவாகவே, இருக்கும் என்று, நிபுணர்கள், எச்சரிக்கின்றனர்.

உள்நாட்டு உணவு தானிய விநியோகங்கள், பாதுகாப்பாக, இருந்தாலும், பாசுமதி அரிசி ஏற்றுமதி, கடுமையாகப் பாதிக்கப்படும். இது, ஏற்கனவே, போராடி வரும், விவசாயிகளின், துயரங்களை, மேலும், அதிகரிக்கும் என்று, ஆய்வாளர்கள், கணிக்கின்றனர்.

 

Comments