PAPAR,
நேற்று கினாருட், கம்போங் மூக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் தப்பிய எட்னா ஜானி (36), அந்த துயரமான தருணத்தில் பலரும் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டதாகக் கூறினார்.
இந்த பேரழிவில், அவரது 38 வயது சகோதரி மற்றும் அக்காவின் 11 வயது மகள் உயிரிழந்தனர். சகோதரியின் வீடு மலைத்தாழ்வில் இருந்ததால், நிலச்சரிவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
“நிலச்சரிவு நேரத்தில், யாரோ உதவி கேட்டு கத்துவது போல சத்தம் கேட்டது. ஆனால் அது என் சகோதரியின் குரலா என்பதை உறுதியாக அறிய முடியவில்லை,” என்று இரண்டு குழந்தைகளின் தாயான எட்னா மீடியாவிடம் கூறினார்.
“நான் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு பெரிய மரம், கூரையில் விழுந்தது போல சத்தம் கேட்டது. உடனே நான் என் கணவருடன் சேர்ந்து ஜன்னல் வழியாக இரண்டு குழந்தைகளையும் கொண்டு வெளியே குதித்தோம். அப்போது என் உடனடியான எண்ணம் என் குழந்தைகளையும் என்னையும் காப்பாற்றுவதே.” என்றார் எட்னா.
நாங்கள் வெளியே வந்த பின்பே, சகோதரி மற்றும் அக்கா மகள் நிலச்சரிவில் புதைந்துவிட்டதை அறிந்தனர். ஆனால் அப்போது செய்ய எதுவும் இல்லை. பின்னர், அவர்களின் உடல்கள் வெள்ளை பிளாஸ்டிக் பைகளில் வெளியே கொண்டு வரப்படுவதை தாம் கண்டதாக எட்னா கண்ணீருடன் கூறினார்.
இதற்கு முன்னர், எட்னாவின் மைத்துனர் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், மனைவியும் மகளும் நிலச்சரிவில் சிக்கியிருப்பதால் யாரேனும் எக்ஸ்கவேட்டர் கொண்டு வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
“யாராவது தயவு செய்து உதவுங்கள். எக்ஸ்கவேட்டர், ஹிடாசி எதுவாக இருந்தாலும் அனுப்புங்கள். என் மனைவியும் குழந்தையும் உள்ளே சிக்கியுள்ளனர்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று காலை 10.02 மணிக்கு கம்போங் மூக் நிலச்சரிவு குறித்த அவசர அழைப்பு வந்ததாகவும், சுமார் நான்கு மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு இருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சபா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் மொஹமட் பிசார் அசீஸ் தெரிவித்ததாவது, கூறினார். மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.