Kinabatangan,
நேற்று, கம்போங் பாரிஸ் 1 அருகே, ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் வேன் மோதியதில், பக்கவாதம் ஏற்பட்டிருந்த பெண் நோயாளி உயிரிழந்தார்.
காலை 9.40 மணியளவில் நடந்த விபத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர், துணை டிரைவர், ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் வேனில் இருந்த எட்டு பேரைச் சேர்த்து மொத்தம் 11 பேர் காயமடைந்தனர் என Kinabatangan மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி டி. ரவி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்போது Kinabatangan மருத்துவமனையின் பச்சை மண்டலம் (green zone) பகுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நேரத்தில், அந்த பெண் நோயாளி லஹாட் டத்து மருத்துவமனையிலிருந்து கோத்தா கினபாலுவிலுள்ள குயின் எலிசபெத் 1 மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தார்.
“ஆம்புலன்ஸ் ஒரு வளைவில் சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே வந்த வேன் எதிர் பாதையில் புகுந்ததால் மோதல் ஏற்பட்டது. இதில் நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு, 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.