Offline
Menu
மெர்சிங்கில் இரு வாகனங்கள் மோதல் :ஒரு பெண் பலி, 7 பேர் காயம்
By Administrator
Published on 09/17/2025 09:00
News

மெர்சிங்,

ஜலான் ஜெமாலுவாங்–மெர்சிங் பகுதியில், Jemaluang Dairy Valley அருகே நேற்று மாலை இரண்டு வாகனங்கள் மோதியதில் 48 வயது ஐஷா ஹஸன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் அதில் 7 வயது ஒரு பெண் குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திலேயே மருத்துவ பணியாளர்கள் இறந்தவரை உறுதிப்படுத்தினர் என மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய இயக்குநர் சீனியர் தீயணைப்பு அதிகாரி II ருஷ்தான் எம். யூசுப் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக மாலை 2.36 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், தீயணைப்பு வாகனம் மற்றும் எமர்ஜென்சி மெடிக்கல் மீட்பு சேவை (EMRS) பிரிவு உடனடியாக அனுப்பப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது, டோயோட்டா வியோஸ் மற்றும் ஹோண்டா BRV கார்கள் மோதியுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. வியோஸ் வாகனத்தில் சிக்கிய ஒருவரை மீட்பதற்காக சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

காயமடைந்தவர்கள் மெர்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர், இறந்தவரின் உடலை போலீசுக்கு ஒப்படைத்தபின் நடவடிக்கை முடிவடைந்தது என்றார் அவர்.

மேலும் மெர்சிங் போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

Comments