Offline
Menu
கிரிப்டோ மோசடியில் மூதாட்டி ரூ.5 கோடி இழப்பு
By Administrator
Published on 09/17/2025 09:00
News

ஈப்போ,

ஆன்லைன் முதலீட்டு தளத்தின் மூலம் நடத்தப்பட்ட கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி, 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு தொழில்துறையில் ஈடுபடும் பெண் RM5,030,970ஐ இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் “ElfTV” எனும் போலி கிரிப்டோ தளத்தின் மூலம் ஏமாற்றப்பட்டார். அந்த தளம் முதலில் Facebook மற்றும் “AB4 Trend Navigation” எனும் ஆன்லைன் முதலீட்டு குழுவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது என பேராக் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

முதலாவது முதலீடாக ஜூலை 2025-ல் RM10,000 செலுத்திய அவர், பின்னர் தொடர்ச்சியாக பணம் செலுத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்தம் RM5 மில்லியனுக்கும் மேல் இழந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

மோசடி கும்பல், ஆரம்பத்தில் போலியான லாபத்தை கணக்கில் காட்டி இவரின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றச் சொல்லியதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர் முதலீட்டைத் திரும்ப பெற முயன்றபோது, பணப் பரிமாற்றம் தோல்வியடைந்து, தள அணுகலும் முடக்கப்பட்டது என நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் பங்குச் சந்தை ஆணையத்திடம் விசாரித்தபோது, அந்த தளம் பதிவு செய்யப்படாததும், சட்டவிரோத முதலீட்டு நிறுவனமாக பட்டியலிடப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420 (மோசடி) யின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லாபம் எனக் கூறி வரும் முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

Comments