கோலாலம்பூர்:
கெரிக், செலாட் பாகார், சுங்கை ஆயிர் காலா ஆற்றுப் பகுதியில், ஒரு பச்சிளம் குழந்தையின் உடல், நேற்று, பிற்பகல், 2.15 மணியளவில், கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட, பச்சிளம் குழந்தையின், பாலினமும், இனமும், இன்னும், அடையாளம் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல், ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு, பிரேதப் பரிசோதனைக்காக, அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 318-இன் கீழ், விசாரிக்கப்பட்டு வருகிறது என்று, கெரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அப்துல் சமாட் ஒத்மான் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை, இந்தச் சம்பவத்தை, தீவிரமாகப் பார்க்கிறது என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில், ஈடுபட வேண்டாம் என்றும், அவர், பொதுமக்களுக்கு, அறிவுறுத்தினார்.