மும்பை – இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து 20 நாள் ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடு மேய்ப்பர் ஒருவர் மண்ணின் அடியில் இருந்து அழுகுரல் கேட்டதால் கிராம மக்களுடன் சேர்ந்து போலீசுக்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் தோண்டி குழந்தையை மீட்டனர்.
மருததுவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை தற்போது NICU பிரிவில் தீவிர சிகிச்சையில் உள்ளது. மருத்துவர்கள் அவளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தொற்று, பூச்சி, விலங்குகளின் கடி போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறினர்.
போலீசார், இச்சம்பவம் சமூகத்தில் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை கொடுக்கும் பழக்கவழக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புகின்றனர். குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்கின்றன.
2019-இலும் இதேபோன்று, உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.