கோலாலம்பூர்:
கிள்ளானில் இதுவரை நடத்தப்பட்ட பல போதைப்பொருள் அட்டையடி நடவடிக்ககைள் RM 600 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1.2 கோடி பயனர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்க முடியும் என்று மதிப்பிடப்படுகிறது. இது தேசியத்திற்கு ஒரு ஆபத்தான அறிகுறி என Alliance for a Safe Community தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தியே தெரிவித்துள்ளார்.
இந்தப் பெரும் அளவிலான விற்பனைகள், மலேசியாவை பொதுவாகவும், போதைப்பொருள் விநியோக மையமாகவும் பார்க்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச சிண்டிக்கேட்டுகளின் குறிக்கோளை வெளிப்படுத்துகிறது. எக்ஸ்டசி மற்றும் பிற செயற்கை போதைப்பொருட்கள் முக்கியமாக இளையோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மிக ஆபத்தானவை என்றும் அவர் அச்ச்சம் வெளியிட்டுள்ளார்.
மேலும், மலேசிய காவல் துறையின் (PDRM) உடனடியான நடவடிக்கைக்கைகளை அவர் வியந்து பாராட்டினார். அவர்களின் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பால் தேசிய அளவிலான பேரழிவை தவிர்க்க முடிந்தது என்று அவர் கூறினார்.
போதையை வழக்குகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது எனவும், எல்லை கடத்தல், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் நுண்ணறிவு பகிர்வு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிண்டிக்கேட்டுகளை அழிக்கும் நடவடிக்கைகளும் தேவை என்றும் லீ தெரிவித்தார். பெற்றோர், பள்ளிகள், சமூகத் தலைவர் மற்றும் குடிமக்கள் விழிப்புணர்வில் பங்கு கொண்டு இளையோருக்கு எதிர்ப்பு திறனை உருவாக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்கிறார் அவர்.
இதனிடையே, போதைப்பொருள் எதிர்ப்பில் ஒற்றுமையும், கவனமும், அர்ப்பணிப்பும் தேவை என்பதை இந்த கைப்பற்றல் நினைவூட்டுகிறது. செப்டம்பர் 10 அன்று கிள்ளானில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் 3,586.45 கிலோ அளவிலான போதைப்பொருள், மதிப்பில் ரூ.598.9 மில்லியன், போலீசார் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.