கோலாலம்பூர்:
குற்ற விசாரணைகளில் கைபேசி நுண்ணறிவை (AI) மீது அதிகமாக நம்பினால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளின் விளைவுகள் பாதிக்கப்படலாம் என்று மலேஷிய எதிர்ப்பு ஊழல் ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப, சட்ட மற்றும் ஒழுங்குச் சான்று சம்பந்தமான விவகாரங்களில் நிபுணர்கள் கலந்து கொள்ளாமல் AI பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். ஆனால், AI உதவியால் மங்கலான படங்கள் மற்றும் வீடியோக்களை தெளிவுபடுத்தி, சந்தேகநபர்களை அடையாளம் காண சான்றுகளை வலுப்படுத்த முடியும் என MACC யின் டெக்னாலஜி ஃபொரென்சிக்ஸ் பிரிவு இயக்குநர் வான் ஜுல்கிப்லி வான் ஜுசோ கூறியுள்ளார்.
ஆனால், AI பயன்படுத்தும் போது தொழில்நுட்ப, சட்ட மற்றும் நெறிமுறை சவால்கள் இருப்பதாக அவர் அறிவுறுத்தினார். மனித நிபுணத்துவம் இல்லாமல் முழுமையாக AI-ஐ நம்பினால் சான்றுகளை தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகாரிகளை பயிற்றுவிப்பதில் நாம் பின்னடைவாக இருப்பது கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
AI-ஐ நாம் சட்ட நீதிமன்றச் சான்றுகளுக்கு வலுப்பெறுமாறு பயன்படுத்துவதெனில் அதற்கேற்றாற்போல் சட்டங்களையும் ழுமையாக சரிப்படுத்தவேண்டும் என்றும் மலேசியாவில் Personal Data Protection Act 2010, Communications and Multimedia Act 1998, Computer Crimes Act 1997 மற்றும் Digital Signature Act 1997 போன்ற சட்டங்கள் இதற்கான கட்டமைப்பாக உள்ளன என்றும் அவர் கூறினார்.