Offline
Menu
இந்தோனேசியா: 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்
By Administrator
Published on 01/20/2026 12:00
News

ஜகார்தா,ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளாகி அது முழுவதும் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என்றும் அதில் பயணித்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

 

Comments