Offline
Menu

LATEST NEWS

தமிழகத்தில் 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம்?
By Administrator
Published on 06/06/2026 09:00
News

சென்னை, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ அரசரடியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே 30-ந்தேதி எரிபொருள் நிரப்புவது போல் வந்த கும்பல், கொடிய ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது. ஊழியர் ஒருவரை அரிவாளால் தலையில் காயப்படுத்தியதுடன், விற்பனை நிலையத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இது ஒரு சாதாரண சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லை. இந்த செயல் எங்கள் ஊழியர்களை மட்டுமல்ல, அங்கு வரும் பொதுமக்களின் உயிரையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசுக்கு பெட்ரோல் பங்குகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரிவருவாய் கிடைக்கிறது.

எனவே குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, போதைப்பொருள் பின்னணி விசாரணை நடத்துவதுடன், பிரத்யோக பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகளும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

Comments