Offline
Menu
மியான்மர் அதிருடனான சந்திப்பை நியாயப்படுத்தினார் அன்வார்
By Administrator
Published on 11/25/2026 15:00
News

மியான்மரின் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக அந்த நாடு இனப்படுகொலையைச் செய்ததாக அனைத்துலக நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்துள்ள நிலையில், மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லைங்குடன் தான் நடத்திய சந்திப்பை பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று நியாயப்படுத்தினார்.

 

கடந்த மாதம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மியான்மரிலிருந்து வந்த அகதிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க உதவியதாக அன்வார் நாடாளுமன்றத்தில் ( Dewan Rakyat) தெரிவித்தார். அந்நாட்டு ஆட்சியின் கொடுமைகளுக்கு ஆளான சுமார் 200,000 மியான்மர் நாட்டவர்கள் மலேசியாவுக்குத் தப்பி வந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

 

எங்களுக்கு இங்கே ஒரு சிக்கல் இருந்தது; நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. மியான்மர் அதிபரை அழைத்தது அந்தச் சிக்கலைத் தீர்த்ததா? ஆம், தீர்த்தது என்று கூறிய அவர், 10,476 மியான்மர் நாட்டவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதைக் குறிப்பிட்டார். மேலும், அகதிகளைத் திருப்பி அனுப்பும் முடிவு அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பே எடுக்கப்பட்டது என்றும் அன்வார் விளக்கினார்.

Comments