Offline
அதிகாலை வீட்டிற்குள் புகுந்த டிரெய்லர் – மாது பலி; இருவர் காயம்
Published on 08/04/2024 00:10
News

குவாந்தான்: பெக்கானில் உள்ள கம்போங் கெத்தாபாங் ஹிலிரில் இன்று அதிகாலை டிரெய்லர் சாலையை விட்டு விலகி  வீட்டின் மீது மோதியதில் மாது ஒருவர் மரணமடைந்தார். பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், அதிகாலை 4.46 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும் பெக்கான், பெரமு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 16 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகள் வழியாக தேடுதல், மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது டிரெய்லரின் முன்பகுதிக்கு அடியில் சிக்கியிருந்த பெண்ணைக் கண்டனர். பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று இஸ்மாயில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பொருட்களை ஏற்றிச் வந்த டிரெய்லர் ஓட்டுநரும், வீட்டில் இருந்த மற்ற காயமடைந்த இருவர் பெக்கான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Comments