தமிழர் பேரவை, ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில், அரசு பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், தங்கள் அனுபவங்களை இளையர்களுடன் பகிர்ந்து, உரையாடல் மூலம் அறிவுரை வழங்குவர்.
தேசிய நூலக வாரியத்தின் ‘தி போட்’ அரங்கில், பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 15-35 வயதுக்குட்பட்ட 50 இளையர்கள் கலந்துகொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, வாழ்க்கைத்தொழில் மாற விரும்பும் இளையர்களுக்கான மிகுந்த ஊக்கம் அளிப்பதாக தெரிவித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெள்ளிநிலா குணாளன் கூறினார்.
நிகழ்ச்சியில் நான்கு கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்று, பேச்சாளர்களுடன் நேரடி உரையாடலுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கலந்துகொள்ள விரும்புவோர் தமிழர் பேரவையின் இன்ஸ்டகிராம் அல்லது இணையத்தில் பதிவு செய்யலாம்.