Offline
தென்ஆப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on 01/17/2025 15:58
News

தென்ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன. தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவை உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கமும் என்று. இந்த சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.

இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கிறதா? என தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இவர்களில் பலர் தாங்களாகவே வெளியே ஏறினர். பலர் சுரங்கத்திலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். இதனால் வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர். இதனால் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் போலீசார் இன்று சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டனர். ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனால் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

போலீஸார் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. சுரங்கத்தில் யாரும் இல்லை என நம்பப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்  சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், போலீஸார் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Comments