Offline
ஆஸ்திரேலியாவில் கனமழை: 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
Published on 01/17/2025 16:00
News

கான்பெரா,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று கடுமையாக மழை பெய்ந்தது. குறிப்பாக அங்குள்ள சிட்னி நகரில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள பாரமாட்டா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக அங்குள்ள சிட்னி நகர் மின்நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் மின்சார வினியோகம் தடைப்பட்டதால் 1¼ லட்சம் வீடுகள், முக்கிய கட்டிடங்கள் இருளில் மூழ்கின. கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்தார். மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

 

Comments